இனிய காலை வணக்கம். காலையில் எழுந்ததும் கண்ணாடியில் விழிக்கும் நான் e-paper ல் விழித்து ஒரு ரவுண்டு அடித்து விட்டு பிறகு கண்ணாடி பார்க்கிறேன். அகத்தின் அழகு முகத்தில். ஆசிரியர் குழுவுக்கு பாராட்டுக்கள்.
கவிதைப் பகுதியில் எல்லாம் அருமை. நான் எல்லோர் கவிதைகளையும் படித்து வருகிறேன். எல்லாவற்றையும் பாராட்ட வேண்டும் என நினைத்தாலும் தினம் ஒரு ஐந்து ஆறு பேர் எடுத்துக் கொண்டு பாராட்டுகிறேன்.
முதலில் கலியுகன் அவர்களின் துளிப்பாக்கள் பார்த்தேன். அருமை குறிப்பாக " தேசம் கல்லறையில் கடன்கள் சிலுவையில், உயிர்ப்பித்தல் எப்போது? " "சைவர்கள் மாநாடு அன்னதானம் மாமிச குணங்கள்" அற்புதம். பாவலர் கருமலை தமிழாழனின் " "பெண்ணடிமை தளையுடைப்போம்" வழக்கம்போல் அருமை. ஆஹா அடுத்து முனைவர் வேதநாயகம் அவர்களின் சுற்றுலா ( நிலைமண்டில் ஆசிரியப்பா). புரிந்து படித்தேன் அருமை. அடுத்து சண்முகம் சுப்பிரமணியம் அவர்களின் "கணக்கும் கணக்கு". கடைசி வரிகள் மனது கனத்தது. ஆர் சீதாராமன் அவர்களின் "ஒன்றை ஒன்று தான் இலக்கு" நல்ல கருத்துள்ள கவிதை. எனினும் கடைசி வரிகள் மனித இனம் ஒற்றுமையாய் இருந்தால் தான் முடியும் என்பதை நாம் அறிய வேண்டும். சாதி மதம் இனம் என்று பிரிந்து கிடந்தது போதும் என்று சொன்னாலும் எத்தனை பேருக்கு அந்த எண்ணம் மாறும் என்பது ஒரு கேள்விக்குறி. நல்ல எண்ணத்துடன் எழுதி இருக்கிறார். அற்புதம். நௌஷத் கான் அவர்களின் கவிதை அருமை. தோற்றுப்போன காதல்களை படம் பிடித்து காட்டி இருக்கிறார். நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள் எனக்கு தெரியும். க குமாரகுரு அவர்களின் தேர்ச்சி அருமையான கவிதை. "அறியள்ளி ஆக்கையில் புணைந்து..... சிலந்தி... வேற லெவல். பொன் கருணா அவர்களின் அன்பு மட்டும் வெல்லும் நல்ல கான்செப்ட். தமிழ் நிலாவின் " சிறகடிக்க ஆசை" கவிதை அருமையாக இருக்கிறது. எனக்கும் அது போல் இருக்க ஆசையாக உள்ளது. கடைசியாக வே தமிழழகன் அவர்களின் " வினைக் காற்று" கடைசி வரிகள் அழகு. " விலகாதிருந்த விதிப் பயனாய் விடியட்டும் முடியட்டும் வினைக் காற்று ".
ஒட்டுமொத்தமாய் அனைத்து கவிதைகளும் அசத்தல்தான். கவிதைகள் நிறைய நான் படிப்பதனால் எனக்கும் கொஞ்சம் எழுத வரும் போலிருக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள்
இந்தியாவின் விவசாய பொருட்களின் மேல் 100%. அமெரிக்க பரஸ்பர வரிகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது முக்கியமாக இந்திய விவசாய பொருள்களின் மேல் 100 சதவிகிதம் வரை வரிகளை விதிக்க அமெரிக்க முடிவு எடுத்துள்ளது. இதன் பின்னணி எல்லோரும் அறிந்தது. இரண்டாவது முறையாக பதவி ஏற்ற ட்ரம்ப் அவர்கள் தங்கள் நாட்டின் பொருள்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிகமாக வரி குற்றம் சாற்றினார் அதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருக்க முடியாது வெளிநாட்டு பொருள்களுக்கு அதிக வரி விதித்தார் இது ஏப்ரல் இரண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
பிரதமர் மோடி அவர்களும் சிலி ஜனாதிபதியும் சந்தித்தார்கள். ஐந்து நாள் அரசு முறை பயணமாக சிலி நாட்டு ஜனாதிபதி இந்தியா வந்துள்ளார். இரு நாட்டு உறவு, வர்த்தகம் பொருளாதாரம் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், ரயில்வே விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவுடன் சிலி செயல்பட தயாராக உள்ளது என்பதை செய்தி.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் என்ற பெயர் சூட்டப்படுகிறது. அரசாணை யை பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில் கோவையில் பெரியார் சென்னையில் அண்ணா மதுரையில் கலைஞர் ஆகியவரின் பெயரை தாங்கிய நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ அதேபோல திருச்சியிலும் அனைவருக்கும் நூலகத்துக்கு காமராஜர் என்று பெயர் வைக்க பொருத்தமாக இருக்கும் நான் கருதுகிறேன் என்றார். நூலகங்கள் நிறைய தேவை. வாசிப்புகள் பெருக வேண்டும் நல்ல விஷயம் தான்.
கும்பகோணம் வெற்றிலை தேவாளை மாணிக்க மாலைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு. இந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும் போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். நல்லது தான்.
இன்னும் சுவாரஸ்யமான செய்திகளை பார்ப்போம்.
** கோவில்பட்டி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவை. கோட்ட கண்காணிப்பாளர் தகவல்.
தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஹெக் ட ருக்கு மஞ்சள் சாகுபடி. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாகர் சர்வதேச பள்ளியில் யூகேஜி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா. உண்மையிலேயே குழந்தை களின் படிப்பு சுமை அப்படித்தான் இருக்கிறது.
நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான நிதியை பெற நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் கூறினார். பின்னணி என்னவெனில் காவிரி மற்றும் அதை சுற்றியுள்ள துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கான நிதியை பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். அதற்கான விதிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். சுத்தமானால் சரி.
விதி மீறி கனிம வளம் கடத்திய 81 வாகனங்கள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்.
ஏப்ரல் ஏழாம் தேதி திருவாரூர் ஆழித் தேரோட்டம். ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு. சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உஸ்தவம் நடந்து கொண்டிருக்கிறது. ஆழி தேரோட்டத்திற்கான தேர் 350 டன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
ஆஹா நல்ல செய்தி தமிழக கேரள வனப்பகுதியில் 27 மாதங்களாக என் மீது ரயில் மோதி உயிர் இழப்பு இல்லை. தெற்கு ரயில்வே தகவல் இதுவே தொடரட்டும். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நலம் தரும் மருத்துவத்தில் சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள் குறிப்பு அருமை. இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மலச்சிக்கலையும் நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். அதிகரிப்பதோடு பெரும்பாலும் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. கோடையில் படை எடுக்க வேண்டியது தான்.
ஆதிதிராவிடர் பழங்குடி மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட கலெக்டர் ரா சுபலட்சுமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
நத்தம் பட்டியில் புதிதாக முளைக்கும் சுங்கச்சாவடி மதுரை செல்வதற்குள் ஐந்து இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம். ஏன் என்ற கேள்விக்கு நான்கு வழிச்சாலை திட்ட இயக்குனர் வேல்ராஜ் பதிலளிக்கையில் கப்பலூர் சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை 44 இல் உள்ளது. நத்தம் பட்டி டோல்கேட் தேசிய நெடுஞ்சாலை 744 இல் உள்ளது. ஒரே சாலையில் 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது என்பதுதான் விதி என்றார் அவர்.
திருவண்ணாமலை மூத்த எழுத்தாளர் தெய்வத்திரு நான் சண்முகம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
"மறதியின் சௌகரியம்" "நிலம்" இரண்டு கதைகளும் நன்றாக இருந்தது. ஒரு சமயம் நினைத்து பார்த்தால் மறதி சௌகரியமாக தான் இருக்கிறது. கே ஆனந்தனின் அவதாரம் எங்க கூட்டாளி நன்றாக இருந்தது. ரமா சீனிவாசன் அவர்களின் நம்பிக்கை நம்பிக்கை நல்ல கட்டுரை.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் டி. என்.தீர்த்தகிரி முதலியார் வரலாறு அருமை. இவர்கள் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. தர்மபுரியின் தற்போதைய பேருந்து நிலையம் தியாகி தீர்த்தகரின் தொடராக விளங்குகிறது என்று படித்த பொழுது ஆச்சரியம் மேலிட்டது. இவர்களெல்லாம் கு டத்திலிட்ட விளக்காக இருந்திருக்கிறார்கள்.
சினிமா செய்திகள் எல்லாமே அருமை. நூல் விமர்சனசனத்தில் அறம் செய்ய பழகு பிரியசகி அவர்களின் நூல் பற்றிய விளக்கம் அருமை.
வாசகர் கடிதம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. சே முத்து விநாயகம் அவர்கள் என் கவிதையை பாராட்டியது எனக்கு மகிழ்ச்சி. ஒரு சிறு பாராட்டு நம்மளுடைய உற்சாகத்தை எப்படி தூண்டிவிடும் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
பல்சுவைக் களஞ்சியத்தில் நடேஷ்
கண்ணா அவர்களின் மனம் ஒரு மகத்தான சக்தி ஒற்றை அருமை. இது ரொம்பவே உண்மை. இன்று நான் கோவிலுக்கு சென்றிருந்த பொழுது துளசி பிரசாதம் கிடைத்தது. அதை மறந்து நானே சாப்பிட்டு விட்டேன். வீட்டுக்கு எடுத்துச் செல்ல இன்னும் கொஞ்சம் துளசி கிடைக்க வேண்டுமே என்று நான் நினைத்தபொழுது, கோவிலுக்கு வருபவர் ஒருவர் இன்று நான் இன்னொரு கோயிலுக்கு சென்று இருந்தேன் அங்கு நடந்த திருமஞ்சன துளசி என்று ஒரு முழம் கொடுத்தார். மனதின் வலிமையை பாருங்கள்.
குழந்தைகளின் கை வண்ணம் பகுதியில் எல்லாமே நன்றாக இருந்தது குறிப்பாக முதலைக்கதை.
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டண உயர்வு. தமிழகத்தில் மொத்தம் 5381 கிலோ மீட்டர் சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் இன்று 78 சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ளன. பத்து சதவீதம் கட்டண உயர்வு உள்ளது. எல்லோரும் இனிமேல் வெளியூருக்கு செல்வது என்றால் யோசிக்க வேண்டும் பேசாமல் பஸ்ஸிலே சென்று விடலாம்.
மாநகராட்சி வரலாற்றில் இதுவரை தமிழ்நாட்டில் 2025 கோடி சொத்து வரி வசூல். அதெல்லாம் சரிதான்.நல்ல விஷயம். ஆனால் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வாடகைக்காரர்களை tax செய்வது எந்த விதத்தில் நியாயம்? சொத்து வரியில் அரசாங்கம் கை வைத்தால் வாடகையில் இவர்கள் கை வைக்கிறார்கள்.
மெட்ரோ ரயில் பயண அட்டையை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு. மேலும் பத்திரப்பதிவில் பெண்களுக்கு ஒரு சதவீதம் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது.
க்ரைம் கார்னரில் நகை கடை அதிப ரிடம் ஒரு கோடி தங்க நகை பற்றி மோசடி செய்த முகவர் கைது. ரூபாய் எண்பது பார்க்கிங் கட்டணம் வசூலித்த வணிக வளாகம். இது திருமங்கலத்தில் நடந்தது. மனுதாரர் கொடுத்த மனுவின் பெயரில் இது விசாரிக்கப்பட்டு மனுதாரருக்கு பத்தாயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.
வாழ்வியல் தர்மங்களாக ராமாயணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர் என் ரவி அவர்கள் கூறினார். அப்படி எடுத்துக் கொண்டிருந்தால் தான் எல்லாம் நல்லா இருந்திருக்குமே. என்ன சொல்லியும் யாரும் கேட்பதில்லை என்பது வருத்தம்.
ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.
சென்னை நேரு மைதானத்தில் நடந்த கால்பந்து கண்காட்சி போட்டி உதயநிதி அவர்கள் துவங்கி வைத்தார்.
அட கடவுளே. திட்டகுடியில் கள்ள நோட்டு அடித்த விசிகவினர் தப்பி ஓட்டம். கடலூர் மாவட்டம் ராவணத்தம் அருகே அந்தநத்தம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய சொந்த நிலத்தில் கொட்டகை அமைத்து அது லேப்டாப் பிரிண்டர் வைத்து கள்ள நோட்டு அடித்திருக்கிறார். கட்சிக்கு கலங்கம் ஏற்பட்டதால் அவரை அந்த பதவியிலிருந்து நீக்கி விட்டார்களாம். மடிக்கணினி இப்படியெல்லாம் உபயோகப்படுகிறதா?
நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்க முயற்சி என்று சோனியா காந்தி அவர்கள் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு. அவர் மேலும் கூறியது என்னவென்றால் தகுதி அடிப்படையில் இல்லாமல் சித்தாந்த ரீதியில் சாதமாக உள்ளவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றன என்றார். கடந்த 10 ஆண்டாக கல்வி சிதைக்கப்படுகிறது என்றார் அவர்.
விண்வெளியில் இருந்து பார்த்தபோது இந்தியா எப்படி இருந்தது என்பதற்கு சுனிதா அவர்கள் சுவாரஸ்யமான பதில். எனக்கு ஒரு கூறி இருப்பது உண்மையில் இருந்து நாங்கள் இமயமலையை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது. இமயமலை இந்தியாவுக்குள் வழிந்து ஓடுவது போல் இருக்கும் என்றார் அவர். நினைக்கவே சுவாரசியமாக இருக்கிறது.
முத்தாய்ப்பு செய்தியாக கழிவறை யில் வரியில் வாழும் சீனப் பெண். வெளியில் வாடகை கொடுக்க வசதி இல்லாமல் கழிவறையில் சொல்ப வாடகை கொடுத்து குடும்பத்திற்காக தன்னை வருத்தி வாழும் பெண்கள் உலகில் எங்கும் உள்ளனர். அதற்கு எந்த நாடும் விதி விலக்கல்ல.
-ஜெயந்தி சுந்தரம்