19-04-2025 விமர்சனம்
இனிய காலை வணக்கம.
அரசியலமைப்பு தான் உயர்ந்தது என்று குடியரசு துணைத் தலைவருக்கு திருச்சி சிவா அவர்கள் திமுக கண்டனம் தெரிவித்தது ஒரு பக்கம் இருக்க இது எதனால் இப்படி கூறினார் என்றால் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாவுக்கு ஆளுநர் ரவி அவர்கள் ஒப்புதல் அளிக்காததால் தான் இந்த விவகாரம் எழுந்தது. அண்மையில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்தது நமக்கு நினைவு இருக்கலாம். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் கூறியது என்னவென்றால் குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது மேலும் அது நாடாளுமன்றத்தை விட மேலாக நீதிமன்றம் செயல்படுவதாக சாடினார். இந்த நிலையில் தான் துணை குடியரசு தலைவர் கன்கருக்கு திருச்சி சிவா அவர்கள் கண்டனம் தெரிவித்தார். மேலும் வந்த செய்தி என்னவென்றால் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் பங்கு என்ன என்பதை பற்றி சட்டப்பிரிவு 142 இல் சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியல் அமைப்பின் அதிகாரம் என்ற பெயரில் எந்த ஒரு தனி நபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அதிக காலம் வரையில் நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவி உள்ளது என்பது தான் செய்தி.
மேலும் கூறுகையில் உச்ச நீதிமன்ற கருத்து குறித்து துணை குடியரசு தலைவரின் கருத்துக்கள் நெறிமுறை அற்றவையாகும். சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும் என்று ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என்றார் அவர்.
எலான் மஸ்க் பிரதமர் மோடி பேச்சு. இதில் முக்கியமாக தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவதில் உள்ள ஆர்வத்தை நம் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
நம் பா. ஜ. க. கட்சியினர் தேர்தல் கூட்டணி பற்றி பேசக்கூடாது. திமுகவை வீழ்த்துவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். தேர்தல் கூட்டணி தொடர்பாக தொண்டர்கள் யாரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில் திமுக ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார். அதிமுக பாஜக கூட்டணி தான் 2026 இல் ஆட்சியே அமைக்கப் போகிறது என்றார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி பெண்களின் வாக்கினாலேயே வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும் என்றார்.
திடீரென்று வேகம் எடுக்கும் கோடநாடு வழக்கு. ஏனாம்? தேர்தல் நெருங்க திமுகவை இறுக்கிப்பிடிக்க தொடங்கும் மத்திய அரசு அதே போல பிரதான் எதிர்க்கட்சியாக அதிமுகவை நிலை குலையச் செய்யும் வேலைகளையும் மாநிலத்தை ஆளும் திமுக சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தான் இந்த கொடநாடு வழக்கு. இதைப் பற்றி அதிமுக செய்தி தொடர்பாளர் சண்முகசுந்தரத்திடம் கேட்ட பொழுது, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தோல்வி சீரான நிர்வாகத்தில் தோல்வி என தோற்றுப்போன திமுக அரசு மக்களை முடுக்கிவிட இது போல்செய்கிறது. இந்த கோடை நாடு வழக்கு ஒரு மடை மாற்றம் என்றார் அவர்.
அடுத்தடுத்து செய்திகளை சுருக்கமாக பார்க்கலாம்.
ஜெர்மனி ஜப்பானிய நாட்டை காட்டிலும் மூன்றாம் இடத்திற்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடாக இந்தியா முன்னேறும். இதை கூறியவர் நிதி ஆயோக் சி இ ஓ பிவிஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நல்லது.
அடுத்து அமைச்சர் பொன்முடி வழக்கு ஐகோர்ட் கண்டிப்பு. என்ன வழக்கப்படி ஏதாவது அவதூறு பேச்சில் இவர்களையெல்லாம் மாட்டிக் கொள்வார்கள். அதற்கு ஒருவர் வழக்கு தொடுப்பார் மீது ஒரு மாதம் ஓடும். அதற்குள் அடுத்து வேறு யாராவது ஒருவர் பேசுவார் அடுத்த வழக்கு ஓடும். செய்தித்தாள்களுக்கு செய்தி வரும் மக்கள் மண்டையை பிய்த்துக் கொள்வார்கள். இந்த செய்திகள் பிற்பாடு ஒன்றும் இல்லாமல் போய்விடும்.
பாருங்கள் அடுத்த தவறான செய்தியினால் தர்பூசணி வியாபாரம் படுத்துவிட்டதாம். யாராவது பழத்தை பிடித்து அதில் ஊசி போடுவார்களா. அந்த நேரத்தில் 50 பழம் அழுகிவிடும். வியாபாரத்தை பார்ப்பார்களா கலரைப் போடுவாங்களா? மக்களே கொஞ்சமாவது திருந்துங்கள் அப்புறம் இந்த கோடை காலத்தில் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும்.
இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்த ராணுவ வீரர் 16 வருடம் கழித்து உயிரோடு வந்தது அதிர்ச்சி. காரணம் அவர் மனைவி இவர் மேல் வரதட்சணை வழக்கு தொடுத்து இருந்தாராம். பாவம் மனுஷன். எங்கெங்கோ காடு மேடு எல்லாம் திரிந்து கடைசியில் இப்படி ஒரு நிலைமை. இது தொடர்பான வழக்கு எல்லாம் முடிந்து கடைசியில் அவர் சகோதரருடன் இருக்கிறாராம்.
சித்தாளின் முதல் நாள் கதை நன்றாக இருந்தது. அவர்களின் வாழ்க்கையை அப்படியே எழுதியிருந்தார் கதாசிரியர்.
தமிழகத்தோடு குமரி இணைந்த சுவாரஸ்யம் மற்றும் தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பி கல்யாணசுந்தரம் அவர்கள் பற்றிய கட்டுரை அருமை.
கவிதைகள் நூல் விமர்சனம் வாசகர் கடிதம் அனைத்தும் அருமை. பல் சுவை களஞ்சியம் அருமை. வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதியும் நன்றாக இருந்தது. கோவில் திருவிழாக்கள் மற்றும் அனைத்து கட்டுரையும் புகைப்படமும் அருமை.
சுற்றுலா பகுதியில் அந்தமான் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. குறிப்பாய் படங்கள் அழகு.
கருணாநிதி அவர்களின் நினைவிடத்தை கோவில் கோபுரம் போல் அமைப்பதாக பாஜக கேள்வி. மேலும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கூறுகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை கருணாநிதி அவர்களின் கல்லறையின் மீது வரைந்து வைத்திருக்கும் அறிவால ய அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது என்றார். இந்துக்களின் நம்பிக்கையை சீண்டி பார்க்கும் சேகர்பாபு அவர்கள் உடனடியாக இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இவ்வாறு அறநிலைத்துறையை தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றார். இதற்கு நாளை பதில் வரும் என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையில் அரசு வேலை திருத்தம் செய்து அரசாணை. தமிழ் வளர்க.
கிராமிய கலைகளில் சாதனை படைப்பவர்களுக்கு 10 லட்சம் பரிசு என்று செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அறிவித்தார்.
சரியா போச்சு தங்கம் ஒரு கிராம் ஒன்பதாயிரம் ஆக உயர்ந்தது. எனக்கு தெரிந்து வரலாறு காணாத உயர்வு.
தெலுங்கானா படுமோசமாக போகின்றது. குடிநீர் தொட்டில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி. அடக்கடவுளே குடிநீர் தொட்டித் தண்ணீரில் தானே சமையல் பண்ணுவாங்க எல்லாருக்கும் தானே ஆபத்து அதுகூடவா தெரியாது. என்னமா மூளை வேலை செய்து அவங்களுக்கு.
பரவாயில்லையே கரூர் மாவட்டத்தில் 25 மெகா டன் குளிர் பதன கிடங்கை பயன்படுத்திக்கொள்ள வியாபாரிகளுக்கு அழைப்பு. மாத வாடகை ரூ 6191 ஜிஎஸ்டி தனி. இங்கேயாவது ஜிஎஸ்டி விடலாமே.
சதத்தீஷ் கரில் 22 மாவோயிஸ்டுகள் கைது. அவர்களிடமிருந்து ஜெலட்டின் குச்சிகள் வெடி மருந்து பொருட்கள் பறிமுதல்.
தன்னுடைய வளர்ப்பு நாய் 50 கோடிக்கு வெளிநாட்டிலிருந்து வாங்கியதாக ஒருவர் செய்தியை பரப்பி விட அமலாக்கத்துறை ரெயிட் எடுத்திருக்கிறது. கடைசியில் பார்த்தால் அது எல்லாம் பொய்யான செய்தி. அந்த நாயும் பக்கத்து வீட்டுக்காரருடைய நாயாம். அதையும் போட்டோ எடுத்திருக்கிறார். அந்த நாயினுடைய விலை ஒரு லட்சம் தான். இதற்கு அமலாக்கத்துடைய நேரத்தையும் வீணடித்த அவரை சும்மா விடலாமா? மக்கள் எல்லாம் சைக்கோ ஆகி கொண்டு இருக்கிறார்கள்.
சரியா போச்சு. க்ரைம் கார்னரில், ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லாததால் கர்ப்பம் என நடித்து குழந்தையை திருடி இருக்கிறார். அவர் குடும்பத்தை ஏமாற்றத்தோடு அல்லாமல் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையை திருடியுள்ளார். போலீசிடம் சிக்கிக்கொண்டதும் தன்னுடைய மாமியார் குடும்பத்துக்கு எதுவும் தெரியாது என்று ஒப்புக்கொண்டால் பிறகு குழந்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுக்கு பேசாம ல் தத்து எடுத்துடலாம். அதுபோக மதுரையில் தொழிலாளர்களை 9 பேர் சொத்துக்காக கடத்தி உள்ளார்கள். விசாரணை நடந்து வரும் நிலையில் அவரை நாங்கள் கட்டாயம் மீட்டு விடுவோம் என்றனர் போலீசார் அப்பொழுதுதான் உண்மையும் தெரிய வரும் என்றனர்.
வெளிநாட்டு செய்திகளில் மேற்கு வங்கத்தில் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யும் வரை டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடங்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்து இந்தியாவில் உள்ள மணிப்பூரில் கலவர வழக்கில் தடய வியல் அறிக்கை விரைவில் தாக்கல். ஒடிசா மாநிலத்தில் 4000 கோடி நெடுஞ்சாலை திட்டங்களை தொடக்கினார் கட்கரி. புவனேஸ்வர் பிராக்யராஜில் பெட்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடையாது. பாதுகாப்பை உரிமையாக கோரக்கூடாது. அல காபாத் நீதிமன்றம் இவ்வாறு கூறியது.
பெலிஸில் நடுவானில் விமானத்தை கத்தி முனையில் கடத்த முயன்ற ஒருவரை பயணி ஒருவர் நடுவானில் லைசன்ஸ்ட் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 14 பயணிகளை சுமந்து சென்றது அந்த விமானம். பரவாயில்ல ஜேம்ஸ் பாண்ட் போல் செயல்பட்டு இருக்கிறார்.
சரியா போச்சு அணு ஆயுதம் உற்பத்தி செய்யும் ஈரான். சர்வதேச அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை. இதன் பின்னணி என்னவென்றால் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்யும்
அபாயகரமான நிலையை ஈரான் நெருங்கி உள்ளதாக ஐநா சபையின் அணு ஆயுத கண்காணிப்பு குழுவினர் தலைவர் ரபேல் குபேசி எச்சரித்துள்ளார். அதிபர் ட்ரம்பின் ஆட்சிக்குப் பிறகு அணு ஆயுதத்தின் ஒப்பந்தத்திற்கு எதிராக கையெழுத்து இடவேண்டும் என்று மிரட்டல் விடுத்ததார். ஈரான் அணு ஆயுதத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் வைத்துள்ளனர் அது ஒரு நாள் இணைப்பார்கள். எங்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்று சொல்வதை விட ஆதாரங்களை நிரூபிப்பதே நல்லது என்று சர்வதேச நாடுகள் கூறுகின்றன.
வர்த்தகப் போர் திவீரம் அடைந்தால் ஒன்று புள்ளி ஐந்து சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். மேலும் வர்த்தக போரை த் தீவிர படுத்தினால் 1.5% சதவீதம் வரை உலக அளவில் சரக்கு வணிகம் என்கிறது ஆய்வறிக்கை.
டிரம்பின் வரிகளுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு ஒருபுறம் மறுபுறம் சீனா அமெரிக்காவின் மிரட்டலை சட்டை செய்யவில்லை என்கிறது செய்தி. அடுத்து ஆக்கிரமிப்பு திட்டத்தை அமலாக்கும் இஸ்ரேல். காசாவில் பல பகுதியில் ராணுவம் மற்றும் வான்வழி தாக்குதலில் இதுவரையில் 51000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொலம்பியாவில் அவசர நிலை பிரகடனம். மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் பலி.
புத்தாண்டு முன்னிட்டு மியா ன்மாரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4000 பேர் விடுதலை. இந்த விஷயத்தில் எல்லா நாடும் ஒன்றுதான் போலிருக்கிறது
-ஜெயந்தி சுந்தரம்