வணக்கம்
24.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
பஹல்காம் தாக்குதலால் வாகா எல்கை மூடல் என்பது அவசியமான நடவடிக்கை. மேலும் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பதும் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை. பாகிஸ்தான் தூதரக ஆலோசகர்கள் வெளியேற்றம் என்பது பாகிஸ்தான் அரசுக்கு அவமானம். மேலும் தன் கடமையிலிருந்து தவறியதற்கான தண்டனை. பாகிஸ்தானியர்கள் இந்தியா வரத் தடை என்பது தேவையான ஒன்று. மருத்துவத்திற்கு இந்தியாவை நம்பி இருக்கும் பாகிஸ்தானியர்களுக்கு இது அடி என்றாலும் பயங்கரவாத மற்றும் தீவிரமாக அமைப்புகளை ஒடுக்காத பாகிஸ்தானுக்கு இத்தண்டனை தேவையானதே. உலக நாடுகள் ஐநா இச்செயலைக் கண்டிக்க வேண்டும். இந்தியாவின் உட்கட்சி விவகாரம் என்று சொலவது திசைதிருப்பும் நாடகம்.
மதுரை சுப்புராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளியில் உலக புத்தக தினத்தை ஒட்டி புத்தகங்கள் வழங்கி வாசிக்க தூண்டியதற்கு பாராட்டுகள். இதேபோன்று ஆரம்ப கல்வி நிலையங்களில் எல்லாம் அரசே புத்தகங்களை வழங்கி வாசிக்கத் தூண்ட வேண்டும்.
மனிதனை வாட்டும் ஐந்து வகை தோஷங்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடியதாகும்.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் பொ. திருகூட சுந்தரம் அவர்கள் பற்றிய கட்டுரை அன்னாரின் தொண்டை எடுத்து இயம்பியது.
பெரியவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பத்து முக்கியமான விஷயங்களை கருத்திலும் கவனத்திலும் கொள்ள வேண்டும்.
வாங்க சம்பாதிக்கலாம் பகுதி சம்பாதிக்க உதவும் எளிய கையேடு.
ரயில் ஓட்டுனர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை ஏசி வசதி அவசியமான ஒன்று. அதை முன்னெடுத்திருக்கும் தெற்கு ரயில்வேக்கு பாராட்டுகள்.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )