tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-03.04.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-03.04.25


தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் அங்கு பணிபுரியும் அன்பு உடன்பிறப்புகளுக்கும் என் இனிய வணக்கம் !


கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

கச்சத்தீவை தாரை வார்த்து

பல ஆண்டுகள் ஆன பிறகு

அதை மீட்க வேண்டும் 

என்று தீர்மானம் கொண்டுவருவது அபத்தமானது. 


கச்சத்தீவை இலங்கைக்கு

கொடுக்கும் போதே தமிழக அரசு போராட்டம் நடத்தி

அதை தடுத்து இருக்க வேண்டும். இப்போது தீர்மானம் போடுவது என்பது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதற்கு ஈடானது.


" கச்சத்தீவு விவகாரத்தில்

முதல்வர் ஸ்டாலின் கபட நாடகமாடுகிறார் " என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார்.


மியான்மரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான பேர் இறந்திருக்கின்றனர் மற்றும் காயமடைந்திருக்கின்றனர்.

அவர்களுக்கு விரைவாக மருத்துவ உதவி, உணவு,  உடை, இருப்பிடம் போன்றவை தேவைப்படுகின்றன. 


உலக நாடுகள் பலவும் மியான்மருக்கு உதவிப் பொருட்களை அனுப்பி வருகின்றன.


சீனாவின் அரசுடன் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சுமுகமான உறவு இல்லை என்பதால் சீனாவின் பொருட்களை ஏற்றி வந்த செஞ்சிலுவை வாகனத்தை எச்சரிக்கும் வகையில் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள் மியான்மர் ராணுவத்தினர்.


ராணுவ ஆட்சியாளர்களுக்கு கொஞ்சம் கூட நெஞ்சிலே ஈரம் இல்லை என்பதை இது காட்டுகிறது. இப்போது யார் உதவி செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மியான்மர் மக்கள் இருக்கிறார்கள். 

ராணுவமோ முரண்டு பிடிக்கிறது.


   

-வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்.