tamilnadu epaper

விதியை வெல்வோம்

விதியை வெல்வோம்

நீ மெல்ல மெல்ல சிாித்தாய்,

ஒன்று சொல்ல சொல்ல நினைத்தாய்!சொல்ல வந்ததை சொல்லாமல் போனதேன்?

நானும் மெல்ல சிாித்தேன் ,

ஒன்று சொல்ல நினைத்தேன் சொல்ல வழியில்லாமல் கடந்துவிட்டேன்! 

நம் காதல் வாழவேண்டாமா? 

கொட்டும் மழையில் சிறியதோா் குடையில் நாமிருவரும் பயணித்தால் நனைந்திடுவோம் என நினைத்து குடையை விட்டு விலகி உன் நினைவால் மழையில் நனைந்தவன் நான், 

கொளுத்தும் கத்திாி வெயிலில் நின் காலில் செருப்பில்லாமல் நடப்பது கண்டு என் செருப்பை உனக்கு கொடுத்து சிவந்தகாலோடும், நின்நிழலோடும் ,

நின் நினைவோடும் நடந்தவன் நான்! 

நம் காதல் வலிமையானதுதானே?

வலிகள் கொடுக்காதே!

வலிய வந்து வம்பிழுக்கவில்லை, 

மெளனம் கலைத்திடு, 

உனை திருமணம் செய்தவன் இறந்துவிடுவான் என்ற சோதிடம் பலித்ததை அறிந்தாயோ? 

நின் முதல் திருமண நிகழ்வின் சோகம் மறந்திடு, 

அது ஒரு கனாக்காலம் விதி வலியது என முதல்கணவன் இறந்த துயர் துடைக்க நான் தயாா்தானே!

 என் தோள் மீது சாய்ந்து துயரம் துடைத்திடு ,

என் சாதகத்திலும் அதே நிலைபாடுதான் எனை திருமணம் செய்தால்பாவைக்கு இறப்பு வருமாம் அதுவும் ஜோதிடம் சொல்லியதாம், அப்படி ஒரு மாற்றுப் பிழையை விதியால் வெல்வோம் நிம்மதி கொண்டு வாழ்வோம் 

விதிதான் வலியதென்றால் வாழ்வில்தான் ஒன்றாகவில்லை இருப்பினும் இறப்பிலாவது ஒன்றாகலாம் ,

நாள் நட்சத்திரம் ராகுகாலம் எமகண்டம் ,குளிகன் என பஞ்சாங்கம் பாா்க்கவேண்டாம் 

புறப்படு புதியதோா் உலகம் படைப்போம் எனினும் நம் காதல் வாழ்க பல்லாண்டு வாழ்க, 



-நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்