news Breaking News
clock

அகல்விளக்கு

அகல்விளக்கு



இருளகற்றி ஒளி தரும் 


களிமண் தாங்கி

கை வளைவுக்குக் கட்டுப்பட்டு 

கண்ணிறைக்கும் வடிவமாக 

கனலுள் வெந்து 

கடைகளில் வீற்றிருக்கும் 


வண்ணம் ஏற்று 

வடிவில் மாறும் சில நேரம்


எண்ணெய் வாங்கி

எரி திரி வழியே ஊடுருவி 

எழிலாய் ஒளி நல்கும்


இருக்கும் இடம் நிறைக்கும் எண்ணெய் 

கிடைத்ததை ஏற்கும் பஞ்சுதிரி

தன்னை உருக்கும் தீக்குச்சி 


இருப்பதை இழந்தும் 

 கிடைத்ததை ஏற்றும் 

சூழலின் பிடியை

நாம் பற்ற 

சூழும் இருள் போகும்

 என்பதற்குச் சான்று 


பரவிக் கிடக்கும் இருளும் 

பட்டொளி வீசும்


அறியாமை இருள் நீங்க 

அறிவெனும் அகல் விளக்கு 

அனுபவத்தில் வழிகாட்டும் 


கற்கும் கல்வி 

மடமை போக்கும்

பெரியோர் சொல் 

 பேதமை நீக்கும் 


அகல் விளக்கின் ஒளியாய்

 அகிலத்தில் நாம் மிளிர 

அறியாததை அறிவோம்

 அறிந்ததைப் பகர்வோம்.

************************************


தமிழ்நிலா

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News