news Breaking News
clock

அம்புவிழிகள்

அம்புவிழிகள்



காலையில் கண்விழித்து கனிவுடல் குளிப்பாட்டி சேலையில் புதிதொன்று செழிப்புடன் சேரக்கட்டி ஈரத்தலை துவட்டி எண்ணெய் சிறிது பூசி இரட்டைப் பின்னலிட்டு இமைகளில் மைதீட்டி மூன்றாம் பிறை போல முல்லைப் பூ சரம் மாட்டி வட்டமுக நெற்றியிலே வட்ட நிலா பொட்டிட்டு முற்றத்தில் நடந்தபடி மூன்று இட்லி தின்று தீர்த்து கல்லூரிப் புத்தகங்களைக் கச்சிதமாய் அடுக்கி ஏந்தி அடுப்பறையில் இருக்கும் அம்மாவுக்கு கை அசைத்து தென்றலாய் நீ வருவாய் தெருவில் குளிர்ச்சி பெறும் அங்கு வருவோரின் அன்பு விழிகள் உன்னை கண்டு அழகென உளறிப் போகும் அன்றோ!



எஸ். சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News