news Breaking News
clock

மன ஊஞ்சல்

மன ஊஞ்சல்



நம்பிக்கை ஒரு முனை,

ஐயம் மறுமுனையாக

காலக் காற்றில்

கயிறு கட்டிய

பழமையான ஊஞ்சலாக

மனம்


வெற்றி முன்னே போக…

பயம் பின்னே வர…


வீழ்ச்சியே வந்தாலும்

வாழ்வோடு ஆடும்

மன ஊஞ்சல்.

 

மகிழ்வின் ஒளி இருக்க,

கண்ணீரின் வலியும் கற்றலாக...


நேற்று இழுக்க,

நாளை தள்ள,

இன்றென்ற நொடியில் வாழ்.


இழப்பில் வருந்தி,

இன்பத்தில் உயர்ந்து,

இரண்டுக்குமே இதயம் பழகு.


வாழ்க்கை என்னும்

நீண்ட ஊஞ்சலில்,

சாய்ந்தபடியே சமநிலை 

கற்றதே வாழ்வு.


நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News