அதிகாரப் பகிர்வு அவசியம்; நாங்கள் கேட்பது தி.மு.க. தோல்வியடைந்த இடங்களைத்தான்: மாணிக்கம் தாகூர்
சென்னை, பிப். –
அதிகார பகிர்வு அவசியம். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டு தோல்வியடைந்த இடங்களைத்தான் நாங்கள் கேட்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதத்தில் நடைபெற இருக்கிறது. தி.மு.க. –- காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு போன்றவை இழுப்பறியாக உள்ளது.
இந்த நிலையில், தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 160– 170 தொகுதிகளில் போட்டியிட்டு, 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று பேசியிருந்தார். இந்த பேச்சை மேற்கோள்காட்டி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டு கூறியிருப்பதாவது:–
2021 -ல் 173-ல் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வெற்றி.நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்.அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வாரம் தொடக்கம் முதலே இந்த ஆட்சியில் பங்குக்கான கோரல்களும் மறுப்புகளும் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன.சென்னையில் ஒரு சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று பேசியிருந்தார். இது ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அமைந்திருந்தது.ஆனால், கூட்டணி ஆட்சி குறித்து தமிழக முதல்வர் பேசிய செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே அவரது கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை.
2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு" என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?