ஆவடி, மதுரவாயல் உட்பட 8 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
Feb 16 2026
43
சென்னை, பிப்.
வரும் 21–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் உட்பட 8 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக ‘புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்’ என்ற பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை 181 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை திரட்டி உள்ளார். அவர் பேசிய பொதுக்கூட்டங்களில எல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு வந்து அவரது பேசைகேகட்டு ஆதரவு தெரிவித்தனர்.
பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, 21–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
21–ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் அம்பத்தூரில் பிரச்சாரம் செய்கிறார்.
22–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு மாதவரத்திலும், மாலை 5 மணிக்கு பொன்னேரியிலும் பிரச்சாரம் செய்கிறார்.
25–ந் தேதி (புதன்கிழமை) திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயல், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளில் மாலை 5 மணிக்கு மதுரவாயல் - ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டப வளாகத்திலும்,
26–ந் தேதி வியாழக்கிழமை செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம், பல்லாவரம் தொகுதியில் மாலை 4.30 மணிக்கு பல்லாவரம்– - துரைப்பாக்கம் ரேடியல் சாலையிலும் பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.
புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
‘புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின்’ போது, சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்பு களும், பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?