ஊட்டியில் திடீரென படகு சவாரியை நிறுத்தினால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள்
சென்னை, பிப். –
ஊட்டியில் திடீரென படகு சவாரியை நிறுத்தினால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஊட்டி பைகாரா ஏரியில் படகு சவாரிக்கு, பெட்ரோல் மோட்டார் படகுகளுக்கு பதிலாக, மின் மோட்டார் படகுகள் பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என் சதீஷ்குமார் மற்றும் டி பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், ஊட்டியில் பைக்காரா ஏரியில் படகு சவாரிக்கு, பெட்ரோல் மோட்டார் படகுகளை பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்பட்டு, விலங்குகள் பாதிக்கப்படுவதுடன், பெட்ரோல் கசிவு காரணமாக, ஏரி நீர் மாசடைகிறது என, நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், படகு சவாரிக்காக பெட்ரோல் மோட்டார் படகுகளை பயன்படுத்தப்படுவதாகவும், டீசல் மோட்டார் படகுகளை பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடர்ந்த வனப் பகுதிக்குள் படகு சவாரி நடத்தப்படுவது இல்லை என்றும், பெட்ரோல் படகுகளால் ஏரி மாசுபடுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. எதிர்காலத்தில் படிப்படியாக பெட்ரோல் மோட்டார் படகு பயன்பாடு குறைக்கப்பட்டு, மின் மோட்டார் படகுகள் பயன்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் உறுதி தெரிவித்துள்ளது. திடீரென படகு சவாரியை நிறுத்தினால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் வருவாய் பாதிப்பு ஏற்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?