news Breaking News
clock

அன்பினிசை

அன்பினிசை


============


நீ கடந்தபின் கலைந்துவிடுகிறது

என் நந்தவனம்..


சோவென்ற பெருமழைக்கு

உச்சிவிழுந்து உடம்பெல்லாம் நனைந்து 

நடுங்குகிறபோதும் உன்னையே தேடுகிறது

இந்தப்பாழும் மனது..


பிசுபிசுக்கும் ஈரக்காற்று

மழை நின்றும் குளிரூட்ட

உன் நினைவுகளை

பற்றித்தழுவுகிறது விழிகளிரண்டும் எப்போதும்..


சேறும் சகதியுமாய்

கலங்கிக்கிடக்கிடக்கிறது உன் ஞாபகங்கள்

இந்த ஜென்மம் முழுதும்..


விடியலின் கானலுக்கப்பால்

இரவினை தேடிக்கொண்டேயிருக்கிறேன்

இப்போதுபோல் எப்போதும்..


உன் கனவுகளை கையிலெடுத்தபடி

இந்த இரவுகள் எனக்குள்

எங்கோ தொலைகின்றன..


தலையணை உறக்கங்கள்

அவ்வளவு எளிதல்ல

நீர்கோர்த்த உன் நினைவுகளோடு புரளுதல்

மெத்தை விளிம்புகளில்

இடம் பிறழ்கிறது..


சில தூக்கணாங்குருவிகள்

ஒத்தடம் செய்யும்

இறகினோசை பருகியபடி

உன் இன்மையை தின்று தீர்க்கிறேன்..


திடுமென பிளந்துகொள்ளும்

காலின் கீழுன் பெருநிலம்..


மண்மூடி மனம்வாடி

செதில்செதிலாய் செல்லுதிரும்

நீ கொஞ்சம் விட்டுச்சென்றிருக்கும்

நேசமும் பாசமும்..


மரமாய் கிளைவிட்டரும்பும்

விதைகளின் கேவலை

சற்று நசுக்காதிரு..


உன் அன்பின் அடிமை நான்

உயிர் பொசுக்காதிரு..!


ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News