அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, செப்.7-

தொடர் விடுமுறையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை யில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் கேரளா, கர் நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இங்கு உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா மலை சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட பல் வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல்கின்ற னர். இந்நிலையில், தொடர் விடுமுறையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிக ளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஞாயி றன்று பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையையொட்டி உதகைக்கு வந்த சுற்று லாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஊர் களுக்கு திரும்பிச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தினால் ஞாயிறன்று பெரும் சிரமத்துக்குள் ளாகி வெகு நேரம் காத்திருந்தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%