
கோவை, செப். 7 –
மீன் வரத்து அதிகரிப்பால் கோவை உக்கடம் மொத்த மீன் சந்தையில் பல்வேறு மீன்களின் விலை கணிசமாகக் குறைந் துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்க ளுக்குப் பிடித்த மீன்களை வாங்கிச் சென்றனர். கோவை, உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டிற்கு, இராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து மீன்கள் வந்தாலும், மிக அதிகமான மீன்கள் கேரள மாநிலத்தில் இருந்தே வருகிறது. இந்நிலையில், சமீப நாட்களாக, மீன் பிடித் தடைக்காலம் தமிழகத்தில் இருந்தது. இதனால், மீன்க ளின் வரத்து மிக குறைவாக இருந்தது. இதன்காரணமாக மீன்களின் விலை மிக அதிகமாக இருந்தது. தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் முடிந்த நிலையில், கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் கழித்து, இரண்டு மாநிலங்களில் இருந்தும் மீன்கள் உக்க டம் மீன் சந்தைக்கு வரத்துவங்கியுள்ளது. மீன்களின் வரத்து அதிகரிப்பால், விலை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக கணவாய் மீன்கள் சாதாரணமாக ரூ.500க்கு விற்கப்படும் நிலையில், தற்போது ரூ.200க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதேபோன்று மற்ற மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களின் விருப் பத்திற்கு ஏற்ப மீன்களை வாங்கிச்சென்றனர். இந்த விலை குறைப்பு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?