ஆசிய கோப்பை சைக்கிளிங் சென்னை​யில் நாளை தொடக்கம்

ஆசிய கோப்பை சைக்கிளிங் சென்னை​யில் நாளை தொடக்கம்


 

சென்னை: ‘டி​ராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்​த​யம் 2026’ வரும் 29 முதல் 31-ம் தேதி வரை சென்னை வண்டலூரில் அமைந்​துள்ள தமிழ்​நாடு உடற்​கல்வி மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழக வளாகத்​தில் உள்ள எஸ்டிஏடி சைக்​கிளிங் ஓடு​தளத்​தில் நடை​பெறுகிறது. இது யூனியன் சைக்​ளிஸ்ட் இன்​டர்​நேஷனல் அமைப்​பின் கிளாஸ் 2 வகை போட்​டி​யாகும்.


இந்த போட்​டியை தமிழ்​நாடு சைக்​கிளிங் சங்​கம், தமிழ் நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​துடன் இணைந்து நடத்​துகிறது. இந்த சர்​வ​தேச டிராக் சைக்​கிளிங் பந்​த​யத்​தில் 11 நாடு​களைச் சேர்ந்த 70 சர்​வ​தேச சைக்​கிளிங் வீரர்​கள் மற்​றும் 50 இந்​திய சைக்​கிளிங் வீரர்கள் பங்​கேற்​கின்​றனர்.


இதில் எஸ்​டிஏடி விடு​தி​களைச் சேர்ந்த சைக்​கிளிங் வீரர்களும் அடங்​கு​வார்​கள். இந்த பந்​த​யத்​தில் ஸ்பிரிண்ட், தனி​நபர் பர்​சூட், டீம் பர்​சூட்,1 கிமீ டைம் ட்ரையல், கெய்​ரின், டீம் ஸ்பிரிண்ட், ஸ்கி​ராட்ச் ரேஸ், ஆம்​னி​யம், மேடிசன், பாயின்ட்ஸ் ரேஸ் மற்​றும் எலிமினேஷன் ஆகிய 11 போட்டிகள் அடங்​கும். டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்​தயத்​தின் மொத்த பரிசுத் தொகை 10,000 அமெரிக்க டாலர்​கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.16 லட்சம் ஆகும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%