ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
Feb 02 2026
16
ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
சான்றிதழை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை: பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் தங்களது தேர்ச்சி சான்றிதழை நாளை (பிப்.2) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுவோர் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுவோர் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு கடந்த நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் 60 சதவீதமும் (90 மதிப்பெண்), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீதமும் (82 மதிப்பெண்) எடுக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவைப் பின்பற்றி, தமிழகத்திலும் சமீபத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டது.
இணையதளத்தில் முடிவுகள்: அதன் அடிப்படையில், டெட் தேர்வு முடிவுகளை டிஆர்பி நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. தேர்வு முடிவு விவரங்களை http://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள் தங்களது தேர்ச்சி சான்றிதழை நாளை (பிப்.2) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.
-----------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?