நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு

நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு



சென்னை, ஜன. - நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மக்களின் முக்கியக் கோரிக்கை, நந்தன் கால்வாய் திட்டம். சாத்தனூர் அணையின் உபரிநீர் தென்பெண்ணை ஆறு மூலமாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, அதை விவசாயி களின் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்தும் திட்டமாகும். இதற்குச் சாத்தனூர் அணையில் இருந்து 23 கிலோமீட்டர் நீள ஊடு கால்வாய் மூலமாக நந்தன் கால்வா யுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. செஞ்சி, விக்ரவாண்டி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இது இருந்து வந்த நிலையில், தற்போது இந்தத் திட்டத்துக்கான நில எடுப்பு பணிக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%