news Breaking News
clock

பணி வரன்முறைப்படுத்தக் கோரி பிப்.26-இல் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

பணி வரன்முறைப்படுத்தக் கோரி பிப்.26-இல் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்



சென்னை, ஜன. 

- பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பிப்.26 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும் என்று டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக்கூட்டம் வெள்ளியன்று (ஜன.30) டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன (சிஐடியு) தலைவர் கே.திருச்செல்வன் தலை மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகளில் 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். நிரந்தர ஊழியர் களுக்கு வழங்கப்படும் சட்டச் சலுகைகளை கடை ஊழியர் களுக்கும் வழங்க வேண்டும். காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை தனி முகமை மூலம் அமல்படுத்த வேண்டும். சில்லரை விற்பனைக் கடை ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் மருத்துவத் திட்டத்திற்கு மாற்றாக இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 40 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி பிப்.26 அன்று வேலைநிறுத்தம் நடைபெறும். இதற்கான அறிவிக்கையை நிர்வாகத்திற்கு வழங்குவ தோடு, முதல் வாரத்தில் மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, 2 ஆவது வாரத்தில் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு நடத்தப்படும். பிப்.15-20 தேதிகளில் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News