ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் பிப்.2-இல் விசாரணை

ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் பிப்.2-இல் விசாரணை



சென்னை, ஜன.

- பாமகவின் பெயர், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி தலைமையிலான பாமகவை அங்கீகரித்த தேர்தல் ஆணையம், தலைவர் பதவியை நீட்டித்து, மாம்பழம் சின்னத்தையும் வழங்கியது. இது தொடர்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் நவம்பர் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையம் இரு கடிதங்களை அன்புமணி தரப்புக்கு அனுப்பியுள்ளது. இதையடுத்து, சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணை யம் தமது தரப்புக்கே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ராமதாஸ் தரப்பு, அன்புமணிக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய் துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்னிலை யில் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) விசாரணைக்கு வரு கிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%