news Breaking News
clock

ஆடும் வரையில்

ஆடும் வரையில்



ஆடும் வரையில் ஆடட்டும்

அடங்கிப் போகும் ஓர்நாளில்

ஓடும் வரையில் ஓடட்டும்

ஒடுங்கிப் போகும் ஒர்நாளில்!

பாடும் வரையில் பாடட்டும்

பதுங்கிப் போகும் ஓர்நாளில்

தேடும் வரையில்

தேடட்டும்

தெரிந்தே போகும் ஓர்நாளில்!


கூடும் வரையில் கூடட்டும்

குமைந்து போகும் ஓர்நாளில்

சாடும் வரையில் சாடட்டும்

சரிந்து போகும் ஓர்நாளில்!

நாடும் வரையில் நாடட்டும்

நலிந்து போகும் ஓர்நாளில்

வாடும் வரையில் வாடட்டும்

வாடிப் போகும் ஓர்நாளில்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News