news Breaking News
clock

அருட்பெரும் ஜோதி

அருட்பெரும் ஜோதி


குறட்பாவில் உலகாண்ட ஒருவன்.! 

அருட்பாவில் அரசாண்ட இன்னொருவன்.!

இரண்டுவரிப் போதுமென்று இவன் நினைத்தான்!

இருட்டினிலே தண்ணீரில் அவன் விளக்கெரித்தான்!


கொல்லாமை வேண்டுமென்று குறள் கொடுத்தான்!

கொடுவாளைத் தூக்கிஎறி.. துடிதுடித்தான்!

எல்லோர்க்கும் பொதுமறையை அவனளித்தான்!

எளியவரின் பசி நினைத்தே அணையாத அடுப்பெரித்தான்.!


ஓடியதோர் காலம் கண்டு அவன் இதயம் பாடியது!

வாடியதோர் பயிர்கண்டே இவன் முகமோ வாடியது!


நீட்டலும் மழித்தலும் இன்றி நீடுவாழ குறள் படித்தான்! 

வீடுபேறு என்பதென்ன சன்மார்க்கம் என்றதொரு நெறி வகுத்தான்.!



பாருலகே.. பார் என்று அழைத்தது ஓர் திருக்குறளே!

பண்பாட்டில் தெய்வீகத் தேன்கலந்த திருவருட்பாவே.!



தமிழ் நிலத்தில் மெய்ஞான விதை விதைத்த உழவர்களை..

பயிர் வளர்த்துப் பசிதீர்க்கப் பாடுபட்ட புனிதர்களை..

துயில் களைய தூய ஔி ஏற்றிவைத்த மேதைகளை.. 

அயர்வின்றி நினைத்தப்படி அவர்கள் வழி நடப்போமா..!


*வே.கல்யாணகுமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News