பொங்கு கடல்.. சங்கு முத்து.. பரவி நின்ற நாடு
எங்கும் தமிழ் நெய்தல் நாடு
நீடு வாழப் பாடு!
மீன்கள் துள்ளி மேவி யாடும் கரையில் சிந்துப் பாடு!
மீனவர்கள் வாழ்வு நிலை உணர்ந்து கவியாடு!
பரதவர்கள் வலை விரித்து கெண்டை மீன்கள் பிடிப்பர்!
பாவையர்கள் கரையிருந்து பொங்கல் வைத்து அழைப்பர்!
இரவுப்பகல் கடல்மாதா
காத்து நின்று அருள்வாள்!
இன்று யோல என்றும் வாழ இனிய வாழ்க்கை தருவாள்!
வலைநிறைய கயல்கள் துள்ளி மகிழ்ந்து விளையாடும்!
கலை வளர படகுதுறையில் கைகள் கொட்டிப் பாடும்.!
கச்சத் தீவு கரையில் ஒதுங்கும் மீன்களென ஆனோம்..
காளையர்கள் படகு ஏறி
மீன் பிடிப்பார் பாரும்..
வீரம் எங்கே.? விடியல் எங்கே? தேடும் எங்கள் வாழ்வே..
நெய்தல் நிலம தமிழர் இனம் யாதும் எமது ஊரே..
ஒற்றுமையாய் கடலாடி
திரைக் கடலைக் கடந்து
வெற்றி மாலை சூடுகின்றோம் ! நெய்தல் நாடே வாழி!
*வே.கல்யாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?