ஆப்​பிரிக்​கர்​கள் அருவருப்பானவர்கள்;- அனை​வருமே குப்​பைகள்​’’: டிரம்ப் பேச்சால் வெடித்தது சர்ச்சை

ஆப்​பிரிக்​கர்​கள் அருவருப்பானவர்கள்;- அனை​வருமே குப்​பைகள்​’’: டிரம்ப் பேச்சால் வெடித்தது சர்ச்சை



‘‘ஆப்​பிரிக்கர்கள் அருவருப்​பானவர்கள்’’ என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு டிரம்ப் பேசி​யுள்ளது சர்ச்​சையை ஏற்படுத்தியுள்ளது.


பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ”சோமாலியாவைச் சேர்ந்​தவர்​கள் அரு​வருப்​பானவர்​கள். பொது​வாக ஆப்​பிரிக்க நாடுகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள் அனை​வருமே குப்​பைகள்​ தான். அவர்​கள் அமெரிக்கா​வுக்கு தேவையில்​லை. அதற்குப் பதிலாக நார்​வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்​றால் டென்​மார்க்​கி​லிருந்து சில நல்லவர்​களை எங்களுக்கு அனுப்புங்கள்’’ என்றார்.


சோ​மாலியா பேரழிவை ஏற்படுத்​தும் இடம். சோ​மாலியர்கள் குற்றச்​செயல்களில் ஈடுபடுபவர்கள். அவர்​கள் கப்பலை பின்​தொடர்வதில் மட்​டுமே சிறந்தவர்கள் என்றும் அவர் கூறி​னார்.


அமெரிக்க அதிப​ராக டிரம்ப் பொறுப்​பேற்ற பிறகு சட்ட விரோதமாக குடியேறிவர்கள் நாடு கடத்​தப்​பட்​டுள்ளனர். குடியேற்ற எதிர்ப்பு கொள்​கைக்கு அமெரிக்கர்களிடம் ஆதரவு திரட்​டும் வித​மாக அவ்வப்​போது டிரம்ப் இது​போன்ற சர்ச்​சை​யான கருத்​துகளை தெரிவித்து வரு​கிறார்.


அதன் ஒரு பகு​தி​யாக தற்போது ஜனநாயக கட்​சி​யைச் சேர்ந்த இல்​ஹான் ஒமர் மீது இன ரீதியாக டிரம்ப் கடுமை​யான விமர்சனத்தை முன்​வைத்​தார். இல்​ஹான் ஒமர் சோமாலியாவைச் சேர்ந்த முஸ்​லிம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%