ஆமை விலக்கு சாதனங்களை மீனவர்களின் இழு வலைகளில் பொருத்தும் பணி மின்னல் வேகம்

ஆமை விலக்கு சாதனங்களை மீனவர்களின் இழு வலைகளில் பொருத்தும் பணி மின்னல் வேகம்


சென்னை, ஜன. –


தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங் களில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளைப் மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாத்திட மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை மூலம் மீனவர்களுக்கு ரூ 6.40 கோடி மதிப்பீட்டில் ஆமை விலக்கு சாதனங்களை விலையில்லாமல் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 முடிய, கடல் ஆமைகள் முட்டையிடும் தமிழ்நாடு கடற்பகுதியில் அவற்றை பாதுகாத்திடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள் முக்கியமாக கடற்கரையிலிருந்து 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிவிசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும், கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் 10 குதிரை திறனுக்கும் அதிகமான திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட பாரம்பரிய மீன்பிடி படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும் மற்றும் திருக்கை மீன் வலைகள்' பயன்படுத்துவதையும் தடைசெய்யதுள்ளது.


ஆமை விலக்கு சாதனம் கொச்சியிலுள்ள ஒன்றிய மீன்வள தொழில்நுட்ப நிலையம் உதவியுடன் வடிவமைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடி இழுவலைப்படகுகளுக்கு விலையில்லாமல் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 50 மீன்பிடி விசைப்படகுகளுக்கு ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் சோதனை அடிப்படையிலும், அதனைத்தொடர்ந்து 2,613 படகுகளுக்கு ரூ 6.29 கோடி மதிப்பீட்டிலும் ஆமை விலக்கு சாதனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது இழுவலைகளில் இச்சாதனங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.


மீனவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் இச்சாதனங்களின் மூலம் மீன்பிடி இழுவலைகளில் கடல் ஆமைகள் சிக்காமல் வெளிச்செல்வதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%