news Breaking News
clock

தி.மு.க. 2வது முறை ஆட்சிக்கு வராது: நயினார் நாகேந்திரன் உறுதி

தி.மு.க. 2வது முறை ஆட்சிக்கு வராது: நயினார் நாகேந்திரன் உறுதி


மதுரை, ஜன.–


தி.மு.க 2வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர சாத்தியம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.


மதுரையில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்ததற்கு மகிழ்ச்சி. அவர் எதிர்பார்த்தபடியே நல்ல முடிவை எடுத்துள்ளார். இதனால் கூட்டணி பலம் அதிகரிக்கும். ஓ.பன்னீர் செல்வம் எங்களுடன் தான் இருப்பார். வேறு பாதையில் செல்ல மாட்டார் என நினைக்கிறேன். நிச்சயமாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயலாற்றுவார்.


2-வது முறையாக தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்தது கிடையாது. இதில் கருணாநிதி பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்தார். எனவே வருகிற தேர்தலில் அதற்கு சாத்தியம் இல்லை.


முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார். த.வெ.க.வில் இணைந்து தவறான பாதையில் சென்று விட்டார். அவரை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.


தமிழகத்தில் கூட்டணி விவகாரங்களில் பா.ஜ.க. தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News