news Breaking News
clock

ஆவியின் பேராசை!!!

ஆவியின் பேராசை!!!


 சண்முகமும், அவன் மகன் சந்துருவும் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி மூன்றாவது வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது .சத்தம் கேட்டவுடன் அழுது கொண்டே வீட்டிற்கு வெளியே எல்லோரும் ஓடி வந்தார்கள். தெருவில் உள்ள எல்லார் வீட்டிலிருந்தும் ஊர் மக்கள் ஓடி வந்து வேடிக்கை பார்த்தனர். ஆம்புலன்ஸ் கதவை திறந்து பணியாளர்கள் வட்டிக்கார வடிவேலுவின் உடலை மெதுவாக இறக்கி கீழே வைத்தனர். சுற்றி இருந்த ஊர் மக்கள் ஐயையோ ,....!வட்டிக்கார வடிவேலு செத்து போயிட்டானா? என்று கூச்சலிட்டனர். சிலர் ஒழிஞ்சா சனியன் இப்பதான் நிம்மதி என பெருமூச்சு விட்டனர்.. ஒரு சிலர் வட்டி கண்டிப்பா வாங்கினாலும் அவசரத்திற்கு பணம் கொடுப்பான் .இப்ப என்ன பண்றது அவன் தலிவிதி இப்படி ஆயிடுச்சு ,என்று வருத்தப்பட்டனர். வடிவேலு எல்லாருக்கும் அஞ்சு பைசா வட்டிக்கு பணம் கொடுப்பான். மாதம் 1ஆம் தேதி ஆனால் டான்.... என்று மணி அடித்தார் போல், பணம் கொடுத்த எல்லா வீட்டு வாசலிலும் போய் நிற்பான் .வட்டியை வசூல் செய்த பின்பு தான் சாப்பிடுவான். அது அவனது தொழிலாகவே செய்து வந்தான். வடிகட்ட முடியாதவர்களிடம் பாத்திரம், பண்டம், பொருள் எல்லாவற்றையும் தூக்கி கொண்டு சென்று விடுவான். வடிகட்டி விட்டு பொருளை மீட்டுச் செல்வார்கள் .இதனால் அவனை எல்லோரும் திட்டுவார்கள் .சாபம் இடுவார்கள். அப்பேர்ப்பட்ட வட்டிக்கார வடிவேலு முதல் நாள், வட்டி வசூலிப்பதற்காக வீடு வீடாக சென்று கொண்டிருந்தபோது, ட்ரான்ஸ்பார்மரிலி ருந்து கரண்ட் கம்பி கட்டாயி கீழே விழுந்து கிடந்ததை கவனிக்காமல் அதன் மேல் காலை வைத்து விட்டான் .உடனே அவனுக்கு ஷாக் அடித்தது ,தூக்கி வீசி எறியப்பட்டான். அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஆனாலும் சிகிச்சை பயனளிக்காமல் ,அவன் இறந்து விட்டான். அவனை இப்பொழுது ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தார்கள் .அவனது உடலை ஐஸ் பெட்டியில் எடுத்து வைத்தார்கள். உடல் முழுவதும் கருப்பாக மாறி இருந்தது .பார்த்தவர்கள் எல்லோரும் ஊர் சாபத்தை வாங்கிக் கொண்டான். அதனால்தான் அல்பா ஸ்ல போய்ட்டான். பேராசைக்காரன், இப்போ பணத்தை எல்லாம் கூடவே வா எடுத்துண்டு போகப் போறான் .ஹூ ம்..... தலையெழுத்து என்று சொல்லிக் கொண்டே போனார்கள். இதெல்லாம் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் ,சந்துருவின் முதுகை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தவர்களுக்கு பகீர் என்றது .பின்னால் நின்றவன் வட்டிக்கார வடிவேலுவின் ஆவி. அடே ய்,!!! நீ எங்கடா? இங்க வந்த எனக் கேட்டார்கள் .அதற்கு அவன் ஆறு மாசத்துக்கு முன்னால என்கிட்ட கடன் வாங்கிட்டு ,வட்டி கூட தராமல் அப்பாவும், பிள்ளையும் பைக் ஆக்சிடென்ட்ல செத்துப் போயிட்டீங்க .அதை இப்போ வட்டியும், அசலு மா சேர்த்து வசூல் பண்ணத்தான், இங்க வந்தேன் என்றான். அடப்பாவி !!நீ ஆவியாகியும் ,உன் பேராசை விடலையா? என்று கூறிவிட்டு காற்றில் கலந்தது சண்முகம் ,சந்திரனின் ஆவிகள்.



எம் .எல் .பிரபா,

ஆதம்பாக்கம்,

சென்னை 88

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News