கோழியூர் ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் சிவன் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் கணேசன் புனித நீர் ஊற்றி கோலாகலம்.
Jan 28 2026
38
கடலூர், ஜன.28-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா கோழியூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த நவீன ஆலயத்தின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 27ந் தேதி காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாகசாலையில் வைத்து புனித வேள்விகள் நடைபெற்றன. நேற்று யாகசால பூஜைகள் நிறைவடைந்த நிலையில், மங்கள வாத்தியங்கள் மற்றும் சிவவாத்தியங்கள் முழங்க, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் ஆலயத்தின் மேல் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மலர்கள் தூவி சுவாமிக்கு மகா அர்ச்சனை நடைபெற்றது. இதனையடுத்து மூலவர் லிங்கத் திருமேணிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெளி ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நமச்சிவாய மந்திரத்தை ஓதி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் குங்குமம் விபூதி வழங்கினர். கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?