இண்டிகோ விமான சேவை ரத்து: சென்னை – பெங்களூர் இடையே சிறப்பு ரெயில்

இண்டிகோ விமான சேவை ரத்து: சென்னை – பெங்களூர் இடையே சிறப்பு ரெயில்

இண்டிகோ விமான சேவை ரத்து: சென்னை – பெங்களூர் இடையே சிறப்பு ரெயில்

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு




இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன.


நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் வசதிக்காக தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


திருச்சியில் இருந்து ஜோத்பூர் செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 20482) இன்று முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது. இதேபோல், ஜோத்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் 10-ந் தேதி முதல் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12695) 6-ந் தேதி முதலும், இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் வரும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலும் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.


மேலும், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து மங்களூரு சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12601) இன்று முதல் ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து மும்பை சி.எஸ்.டி. செல்லும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று முதலும், (22158) மும்பை சி.எஸ்.டி.யில் இருந்து சென்னை கடற்கரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலும் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே போல் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்தால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பெங்களூரு- – சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06255) அதேநாள் மதியம் 2.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாள் இரவு 10.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது.


இதேபோல், கே.எஸ்.ஆர். பெங்களூரு – -எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06257) அதேநாள் மதியம் 2.45 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து 8-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06258) அதேநாள் இரவு 10.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%