news Breaking News
clock

தவெக பரப்புரை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்: விஜய் அறிவிப்பு

தவெக பரப்புரை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்: விஜய் அறிவிப்பு


 

சென்னை: தவெக தலைவர் விஜய் முன்னிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை செயலாளராக (Campaign Secretary) நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் நேற்று (டிச.05) அக்கட்சியில் இணைந்தார். இதனையொட்டி, இன்று தவெகவின் பரப்புரை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர், அண்ணன் நாஞ்சில் சம்பத்.


தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


அண்ணன் நாஞ்சில் சம்பத், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவர், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உடன் இணைந்து தன்னுடைய பணிகளை மேற்கொள்வார்.


கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News