இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு
தூத்துக்குடி, பிப்.
- இந்தியத் துறைமுக வரலாற்றில் முதன்முறையாக, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ‘இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026’-இல் ‘AI-Powered Ports’ என்ற சிறப்பு அமர்வை நடத்தியது. பிப்ரவரி 17 அன்று டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்திய கடல்சார் கட்டமைப்பை AI தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முக்கிய மைல்கல்லாகும். துறைமுகங்கள் வெறும் தானியக்க முறையில் இயங்குவதற்குப் பதிலாக, நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் “Thinking Ports”-ஆக மாற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலகளாவிய போட்டித்திறனை அதிகரிக்க, துறைமுகச் செயல்பாடுகளில் AI-ஐ ஒருங்கிணைப்பது இனி விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயத் தேவையாகும். செயல்திறனை மேம்படுத்துதல், முன்கூட்டியே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சரக்கு இயக்கத்தை வேகப்படுத்துதல் போன்றவற்றில் AI முக்கியப் பங்காற்றும். பிரதமர் அலுவலக பொருளாதார ஆலோ சனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் கௌரவ் வல்லப், வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் உள்ளிட்ட பல முக்கிய நிபுணர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த முயற்சியின் மூலம், இந்தியத் துறைமுகங்களை வெறும் வர்த்தக நுழை வாயில்களாக மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியின் புத்திசாலித்தனமான தூண்களாக மாற்றும் தேசிய அளவிலான உரையாடலை வ.உ.சி. துறைமுகம் தொடங்கியுள்ளது. இத்தகவலை வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?