news Breaking News
clock

மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்


நாகர்கோவில் பிப்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆதி திராவிடர் நலக்குழு கூட்டம், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு குழு கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்கள் மற்றும் குழு உறுப்பினர்க ளிடையே தெரிவிக்கையில்,- கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பி னர்கள் அளித்துள்ள கோரிக்கைகள் விவாதிக் கப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பதில் அளிக்கப்பட்டது. மனிதக்கழிவுகளை மனி தர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்பு குழு உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட கோரிக்கையின் மீது சம்மந்தப்பட்ட அலு வலர்கள் பதில் அளித்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படு கின்ற அரசு நலத் திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டுமெனவும், தாட்கோ துறையின் சார்பில் வழங்கப்படுகின்ற கடனு தவிகள் மற்றும் தூய்மை பணியளார்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் விரைந்து வழங்கிட வேண்டுமெனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவ தற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ் வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நடைபெற்ற கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோக னா, காவல்துறையினர்கள், ஆணைய குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News