நாகர்கோவில்,பிப்.
நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 31). இவருக்கும், குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த திங்கட்கிழமை மதியம் மகேஷ் காவல்கிணறு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் அவ ருக்கு மூளை சாவு ஏற்பட்டது. இதைய டுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குணமடையா ததால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்தார். மகேஷின் கிட்னி, கண், கல்லீரலை தானம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர். செவ்வாயன்று காலையில் மகேசின் உடலில் இருந்து இரண்டு கிட்னி, கண்கள், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதன் பிறகு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவற்றை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். மகேசன் ஒரு கிட்னியை திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னியை காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். இதே போல கல்லீரலும் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் ஆசாரிப் பள்ளம் மருத்துவமனை யிலிருந்து புறப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை சரி செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். . கண்கள் நாகர்கோவிலில் உள்ள மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகேஷின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத னர். அவர்கள் கூறுகையில், “மகேஷ் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்பு களை தானம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அவரது உறுப்புகளை கொண்டு சிலர் உயிர் வாழ்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முடிவை எடுத்தோம். என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?