news Breaking News
clock

தென்காசி பகுதியில் சூரிய மின்விளக்கு பொறி வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு

தென்காசி பகுதியில் சூரிய மின்விளக்கு பொறி வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு



தென்காசி,பிப்.

தென்காசி வட்டாரத்தில் தேர்வான நெல் விதைப் பண்ணை திடல்களில் அமைக்கப்பட்டுள்ள, சூரிய மின்விளக்கு பொறி செயல்பாடுகளை ஆய்வு செய்தார் கள். இரசாயனம் இல்லாமலும் செலவு இல்லாமலும் தீமை செய்யும் பூச்சிகளை மிகவும் எளிதாக கவர்ந்து அழிக்கக் கூடியது. நெற்பயிரின் நடுப்பகுதியில் சூரிய மின்விளக்கு பொறியை வைக்க வேண்டும். ஏனென்றால் நடுப்பகுதியில் வைப்பதினால் நான்கு திசைகளிலிருந்து அந்து பூச்சிகள், தத்து பூச்சிகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வண்டுகள், ஈக்கள் மிகவும் எளிதாக கவர்ந்து அழிக்கப்படுகிறது என்ற தகவல்களை தெரிவித்தார். மேலும், சூரிய மின்விளக்கு பொறி செயல்படும் நேரம் மாலை 6 மணி முதல் இரவு 9 .வரை தான் இதனை பயன் படுத்த வேண்டும். ஏனென்றால் இரவு 9 மணிக்கு மேல் நன்மை செய்யும் பூச்சிகளின் செயல்பாடு அதிகமாக இருக்கும். எனவே சூரிய மின்விளக்கு பொறியை இரவு 9 மணிக்கு மேல் அணைத்து விட வேண்டும். இந்த சூரிய மின்விளக்கு பொறியைய் பயன்படுத்துவதால் நெல் பயிர்களில் 35 சதவிகிதம் பூச்சி தாக்குதல் குறைந்து கூடுதலாக 50 சதவிகிதம் மகசூல் அதிகரிக்கும் என்ற தகவல்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News