news Breaking News
clock

மும்பை பெண் மருத்துவருக்கு சென்னையில் பார்வை மீட்டெடுப்பு

மும்பை பெண் மருத்துவருக்கு சென்னையில் பார்வை மீட்டெடுப்பு



 சென்னை, பிப்.

- மும்பையைச் சேர்ந்த 44 வயது பெண் மருத்துவருக்கு, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வெற்றிகரமாகப் பார்வையை மீட்டுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகக் கடுமையான குளுக்கோமா மற்றும் கண் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 2024-ல் தனது பார்வைத்திறனை முழுமையாக இழந்தார். முன்னதாகப் பல சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் கிடைக்காத நிலையில், இந்தச் சவாலான சிகிச்சையை டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர். இது குறித்து அந்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறுகையில், சிதைந்த கண்ணின் அமைப்பைச் சீரமைத்து, புதிய லென்ஸைப் பொருத்தும் சிக்கலான அறுவை சிகிச்சை ஒருங்கிணைந்த நிபுணத்துவத்தால் சாத்தியமானது என்றார். அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்திய டாக்டர் சூசன் ஜேக்கப், பழைய லென்ஸ் நகர்ந்து கண்ணை அழுத்தியதே பாதிப்புக்குக் காரணம் என்றும், ‘5F-ISHF’ எனும் நவீன முறையில் புதிய லென்ஸ் பொருத்தப்பட்டுப் பார்வை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண் மருத்துவர் மீண்டும் பணிக்குத் திரும்புவது மருத்துவமனைக்குக் கிடைத்த பெருமிதம் என அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News