இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறப்பு; வாகன ஓட்டிகள் பாடல் கேட்டு உற்சாகம்
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஒர்லிக்கு வடக்கு நோக்கி செல்லும் கடற்கரை சாலை யில் ஒரு புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதல் முறையாக 'மெல்லிசை சாலை' அமைக்கப்பட் டுள்ளது. இந்த இசை சாலை உலகிலேயே 5-வது சாலையாக விளங்குகிறது.
இசை சாலையை நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஹங்கேரி தூதர் பரன் ஜாரி, சிவ சேனா முன்னாள் எம்.பி. ராகுல் செவாலே,மாநகராட்சி கூடுதல் கமிஷனர் அவினாஷ் தக்னே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேசும்போது,
"இந்த கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்ட இசை சாலை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும். ஹங் கேரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட இந்த புதுமையான சாலை, எதிர்காலத்தில் மேலும் செயல்படுத்தப்படும்" என்று அவர் கூறினார்.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஒர்லியில் இருந்து நிலத்தடி சுரங்கப்பாதையை விட்டு வெளியேறிய பிறகு நரிமண் பாயிண்ட் வரை சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது 'ஜெய் ஹோ' பாடலை வாகனத்தின் உள்ளே கேட்கலாம். இந்த முயற்சி மும்பைவாசிகளின் மனதில் தேச பக்தியை எழுப்புகிறது. சாலை மேற்பரப்பில் குறிப்பிட்ட தூரத்தில் ரம்பிள் பட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த பட்டைகளை கடந்து செல்லும்போது வாகன டயர்களுக்கும். சாலை மேற்பரப்பிற்கும் இடையிலான உராய்வு காரணமாக 'ஜெய் ஹோ' என்ற இசை ஒலி உருவாகிறது. வாகன ஓட்டிகள் மெல்லிசை சாலையில் குறிப்பிட்ட வேகத்தில் சென்றபோது ஜெய்கோ பாடல் கேட்டு உற்சாகம் அடைந்தனர்.
இதேபோல இசையை ஒலிக்கும் சாலைகள் ஹங்கேரி, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக் கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவே முதல் பரிசோதனை முயற்சி ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?