news Breaking News
clock

இந்தோனேசியாவில் எரிமலை திடீர் வெடிப்பு, 4 நிலநடுக்கம் பதிவு: மக்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை திடீர் வெடிப்பு, 4 நிலநடுக்கம் பதிவு: மக்களுக்கு எச்சரிக்கை


சுமத்ரா,


இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள மராபி எரிமலை இன்று திடீரென வெடித்தது. இது எச்சரிக்கை விடும் வகையில் மிக அதிக உயரத்திற்கு எரிமலை சாம்பலை வெளியேற்றி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனுடன், 4 நிலநடுக்கங்களும் ஏற்பட்டு உள்ளன. 1.6 முதல் 3.6 வினாடிகள் வரையிலான இடைவெளியில் 14 முதல் 36 வினாடிகள் வரையிலான கால அளவில் அவை ஏற்பட்டன. எனினும், எந்தளவு உயரத்திற்கு சாம்பல் புகையை வெளியேற்றியது என்பது பற்றிய உடனடி தகவல் வெளியிடப்படவில்லை.


கடந்த ஜனவரியிலும் இதேபோன்று வெடிப்பு ஏற்பட்டது. அப்போது அதில் இருந்து 1,600 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறியது. கடந்த வாரத்தில் ஒரு முறை இந்த எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது.


இந்தோனேசியாவில் 2026-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 660 எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் அதில் கிழக்கு ஜாவாவில் உள்ள செமரு எரிமலை அதிக அளவாக 348 முறையும், மராபி எரிமலை 18 முறையும் வெடித்து உள்ளது. இதனால், அதனை சுற்றிய 3 கி.மீ. தொலைவுக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News