news Breaking News
clock

ஏஐ-யால் ஐடி துறை அழியாது: அடித்து சொல்லும் இன்போசிஸ் இணை நிறுவனர்

ஏஐ-யால் ஐடி துறை அழியாது: அடித்து சொல்லும் இன்போசிஸ் இணை நிறுவனர்


 

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்ப பெரும் புரட்சியையே ஏஐ ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதர்களின் பல வேலைகளுக்கு ஏஐ ஆப்பு அடித்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஐடி துறை, பத்திரிகை, என பலதுறைகளிலும் வேலை இழப்புகள் ஏற்படும் என்று எச்சரித்து வருகிறார்கள்.


ஏஐ தாக்கம் காரணமாக அமேசான், ஆரக்கிள் என உலகின் முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு பணியிலும் ஈடுபட்டு வருவதால் ஐடி துறை ஊழியர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐடி ஊழியர்கள் நிம்மதி அடையும் விதமாக ஒரு தகவலை இன்போசிஸ் இணை நிறுவனர் கூறியுள்ளார்.


அதாவது, எஐ-யின் தாக்கத்தால், இனி வெறும் கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவது மட்டும் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் வேலையாக இருக்காது என்று இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். இது நந்தன் நீல்கேனி இது தொடபாக கூறுகையில், “ஒரு சிக்கலுக்கு எப்படித் தீர்வு காண்பது மற்றும் ஏஐ-யை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதிலேயே இனி இன்ஜினியர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏஐ செய்யும் வேலையை விட, மனிதர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும், முடிவெடுக்கும் திறனுக்குமே இனி அதிக மதிப்பு இருக்கும்” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News