இன்னும் வேண்டும்

இன்னும் வேண்டும்



    " பேச்சுரிமை

       எழுத்துரிமை

       சொத்துரிமை

       வாக்குரிமை

       சமத்துவ உரிமை..."


       நாடு நமக்கு

       எல்லாம் கொடுத்தது

       சுதந்திரம்

       எனும் பெரும்

       பொக்கிஷம்

       நம் கையில்

       கிடைத்த பிறகு ...."


       சட்ட உரிமை

       உணவுப் பொருள்

       உரிமை

       பாதுகாப்பு உரிமை

       நீர் உரிமை

       நில உரிமை ....."


       எல்லாம் கொடுத்து

       குடிமகன் இந்திய

        மண்ணின் மைந்தன்

        என்கிற பெரும்

        பாக்கியத்தை நாடு

        தருகிறது .... "


       தாய்நாடு தாய்மண்

       நம் தேசம்

       நம் சுவாசம்

       நம் பாசம்

       நல் நோக்கம் ....."


       கனவிலும்

       நினைவிலும்

       நம் தேசம் பற்றிய

       சிந்தனை

       முன்னேற்ற பாதை

       காண உழைப்பு

       தான் மூலவிதை ..."


       துரோகம் இல்லாத

       தூய்மை நேர்மை

       நேசிப்பு தான்

       வேண்டும் இன்றும்

       என்றும் ..."


  - சீர்காழி .ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%