news Breaking News
clock

கூட்டுக் குடும்பம்..

கூட்டுக் குடும்பம்..



குதூகல வாழ்விற்கு

கூட்டுக் குடும்பம் வேண்டுமே!

குறை கூறினாலும் 

குற்றம் கண்டாலும் 

கூட்டுக் குடும்ப சுகம் 

கூடுதல் சுகமே!


மகேசனாய் மனதார

மகிமைகளை கூறி

மாண்பாய் வழி நடத்திட

மாமனார் வேண்டுமே!


குல வழக்கத்தை 

குறையின்றி கூறிடவே 

குதூகலமாய் வாழ்வை 

குறையின்றி நடத்திடவே 

குறைகளை கோபுரமாக்கா

மாமியார் வேண்டுமே!


நறுக்கென்று பேசாது

நட்பாய் பழகி

நயமாய் பேசிடவே

நாத்தனார் வேண்டுமே!


கொத்தமல்லியின் நறுமணமாய்

குறை கூறா குணமாய்

குழந்தைகளை தூக்கி

கொஞ்சிடவே

கொழுந்தன் வேண்டுமே!


உறவு முறை தெரியா

உலக மாய் மாறிட வேண்டாமே!

உறவு பாலம் அமைந்திட

உறவுகளை உரமாக்கு 

உன்னத வாழ்விற்கு...


             

பா.கலைமகள்,

விழுப்புரம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News