காதல்
அழகால்
மோகத்தால்
வேகத்தால்
வருவதே - இளமை காதல் .
அழகின் அனுபவம்
ரசித்த ரசனை
முத்தான வாழ்க்கை
வளர்கிறதே - முதுமை காதல்!
நிரந்தரமான
நிலையான
நிறைந்த காதல்-முதுமை காதல்!
தள்ளாட்டம் வந்தாலும்
வெள்ளோட்ட காதல்!
நரை வந்தாலும்
கறையற்ற காதல்!
காலங்கள் கடந்தாலும்
கலையாத காதல் -முதுமை காதல்!
பல் போனாலும்
பாசம் போகா
பொறுப்பு காதல்!
முத்தான காதல்
முறிவில்லா காதல்
முத்திரை பதித்த காதல்
முதுமை காதல்!
கண்ணியமான
கட்டுப்பாடான
கலப்படமற்ற - காதல்
புனிதமான
போற்றுதலான
புதையல் காதலே
முதுமை காதல்!
கண்கள் நோக்கா
மனது நோக்கும்
மானசீக காதல்!
முதுமை காதலுக்கோர்
முதற் வணக்கத்தை
முழு மனதோடு
சொல்வோம்!
போற்றுவோம்!!
வணங்குவோம்!!!
பா.கலைமகள்,
விழுப்புரம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?