முத்தாரமாய் எனக்கு
முத்தாய் எனக்கு
முதல்வனாய் எனக்கு கிட்டினாயே!
முதல் பார்வை
மெளனமாய் நோக்கி
முகத்தை ஏறெடுத்தாய்
நாணம் பரவி
நரம்பெல்லாம் ஓடி
சிவந்ததே என்
சுந்தர முகம்!
மௌனம் எனக்கும்
மீண்டும்...
பவுர்ணமி ஒளியாய்
பகலில் நீ ஒளித்தாலும்
மௌன வார்த்தையே
மீண்டும்...மீண்டும்...
பலரின் பார்வை
பக்கமெல்லாம் இல்லத்தில்!
மொட்டாய் வியர்வை மலர்ந்தாலும்
மௌன விழியால்
உணர்த்தி துடைத்தாய்!
என்னவனே எனக்கு
அகமெல்லாம் மகிழ்வு
அன்பானவனாய் நீ
கிட்டியமையால்....
முதல் உணவை
முத்தாய் சமைத்தேன்
மெளனமாய் ரசித்தாய்!
படைந்த பிரம்மனுக்கு
பாராட்டுக்கள் பலபல!
கற்புக்கு முதல்வனாய்
கணவனை கொடுத்தாயே
என்றே மௌனமாய் முறையிட்டேன்...
பா. கலைமகள்,
விழுப்புரம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?