news Breaking News
clock

ஈரான் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்



அமெரிக்க கடற்படை ஈரானின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வகையில் மத்திய கிழக்கு கடற்பகுதியில் அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போரைத் தவிர்ப்பதற்கான முக்கியத் தூதரகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News