ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் புஞ்சை காளமங்கலம் கிராமம் பச்சாம்பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா*..

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் புஞ்சை காளமங்கலம் கிராமம் பச்சாம்பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா*..

*.


  ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், பச்சாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிகள்...

27.01.2026 செவ்வாய் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது, அதனை தொடர்ந்து 29.01.2026 வியாழன் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது...

05.02.2026 வியாழன் மதியம் காவேரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம், பால்குடம், காவடி மற்றும் அக்கினி கும்பம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது,

இரவு மாவிளக்கு பூஜை, பொங்கல் பூஜை மற்றும் கம்பம் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

06.02.26 வெள்ளி காலை சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது, மாலை மஞ்சள் நீராட்டு விழா திருவீதி உலா நிகழ்ச்சி மற்றும் ஊஞ்சல் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

07.02.2026 சனிக்கிழமை மாலை விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் 

இரவு மறுபூஜை மற்றும் எடுத்துக்காட்டு ஏலம் நடைபெறும்... 

கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் ஊர் தர்மகர்த்தா திரு.சரவணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் உதயம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்றது

கோவிலில் காப்பு கட்டி திருவிழா நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக நடத்தியவர் கோவில் பூசாரி திரு.மணிகண்டன் மற்றும் திரு.சபாபதி

கம்பத்திற்கு சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் தீர்த்தம் விட்டு மகா மாரியம்மன் வழிபட்டனர்...

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%