வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம் 2030 உங்க கனவ சொல்லுங்க கருத்துக்கேட்புக் கூட்டம்

வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம் 2030 உங்க கனவ சொல்லுங்க கருத்துக்கேட்புக் கூட்டம்

வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம் 2030 உங்க கனவ சொல்லுங்க கருத்துக்கேட்புக் கூட்டம் வழியாக உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தின் கீழ் பின்வரும் கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமியிடம் ஓய்வுபெற்ற ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் கருத்து தெரிவித்தார்! 

வேலூர், பிப். 7-

அரசு நகர்புற மற்றும் ஊர்புற சுகாதார நிலையங்கள் அமைத்து உரிய மருத்துவ வசதி வழங்கி வருகிறது. உள்ளூர் மக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே மருத்துவ வசதியினை இந்த நிலையங்கள் வழங்கி வருகின்றன. மேலும் கூடுதலாக வாரத்தில் ஒரு நாள் சிறப்பு மருத்துவர்கள் வருகை தர வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். 

தற்போது உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை பெருக்கத்தினை கருத்தில் கொண்டு 2030ல் என்ன மக்கள் தொகை இருக்கும் என கணித்து அதற்கேற்றவாறு கூடுதலாக ஆரம்ப சுகாதார / நகர்புற சுகாதார நிலையங்கள் ஏற்படுத்த திட்டமிடவேண்டும். 

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அடுக்கம்பாறையில் அமைந்துள்ளது. பெருகிவரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு இம் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்ல ஏற்ற வகையில் வேலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நகர பேருந்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக காட்பாடி, அலமேலுமங்காபுரம், சத்துவாச்சாரி, கொணவட்டம், அரியூர் ஶ்ரீபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து அடுக்கம்பாறை வரை, நகர பேருந்துங்கள் இயக்கப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவர். இதனால் மாநகரில் இரண்டு சக்கர மற்றும் இதர வாகன போக்குவரத்து குறைய வாய்ப்புள்ளது.

நகரின் பல சாலைகள் அகலப்படுத்தும் பணிக்காக மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது சாலையின் இரு மருங்கிலும் புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க திட்டமிட வேண்டும். வேலூர் மாநகருக்குக்கென வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில் சுற்று வட்ட பாதை அமைக்க வேண்டும். சென்னை, நெல்லை, மதுரை போன்ற மாநகரங்களில் பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக பஸ் டெர்மினஸ் அமைக்கப்பட்டுள்ளது போல் வேலூர் மாநகரிலும் காட்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம், கொணவட்டம், ஶ்ரீபுரம் உள்ளிட்ட தேவைப்படும் பகுதிகளில் பஸ் டெர்மினஸ் அமைத்து போக்குவரத்தினை எளிமைபடுத்த வேண்டும்.

காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே எப்போதும் உள்ளது. நகர பேருந்துகள் ரயில் நிலையத்திற்குள் வந்து சென்றால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்காது. காட்பாடியில் நிறுவப்பட்ட அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் செயல்படாமல் உள்ளன. அதனை செயல்பட வைக்க வேண்டும். நகர பேருந்து 1 மற்றும் 2 வழித்தடத்திற்கான நேர ஒதுக்கீடு 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. தற்போதுள்ள மற்றும் இனி ஏற்படும் போக்குவரத்து வாகன நெரிசலை கணக்கில் கொண்டு வழித்தடங்களின் நேரம் திருத்தி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் இரு சக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு காட்பாடி ரயில்வே மேம்பாலம் விரிவு படுத்தப்பட வேண்டும் அல்லது கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்டப்படவேண்டும். இவ்வாறு அந்த கருத்து கேட்ப கூட்டத்தில் செ. நா. ஜனார்த்தனன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%