சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபபள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்!
இராமநாதபுரம் மாவட் டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவி முத்துக்கனி தலைமையிலும், துணைத்தலைவி கவிதா மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடை பெற்றது. கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்களை பள்ளித் தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் வரவேற்றார். பள்ளியின் செயல்பாடுகள் பற்றி தலைமையாசிரியர் பேசினார்.
கூட்டப் பொருள்களாக எண்ணும் எழுத்தும்,
உயர்கல்வி வழிகாட்டி, அனைத்து குழந்தைகளும் பள்ளியில், உள்ளடக்கிய கல்வி, முன்னாள் மாணவர்கள் கல்வி சாரா மன்றச் செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற தலைப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக தலைமையாசிரியர் நன்றி கூற பள்ளி மேலாண் மைக்குழு கூட்டம் இனிதே நிறைவு பெற் றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?