news Breaking News
clock

உங்கள் ஊர் ரேசன் கடை திறந்துள்ளதா? என போனில் அறியலாம்

உங்கள் ஊர் ரேசன் கடை திறந்துள்ளதா? என போனில் அறியலாம்



நாகர்கோவில். ஜன.

- உங்கள் ஊர் ரேசன் கடை திறந்து உள்ளதா என .உங்கள் செல்போனிலேயே தெரிந்து கொள்ளும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. ரேசன் கடைக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்புவது பலருக்கும் அன்றாடப் பிரச்சனையாக இருக்கிறது. நீண்ட தூரம் நடந்து சென்ற பிறகு கடை மூடியிருப்பதோ அல்லது நாம் கேட்கும் பொருள் ஸ்டாக் இல்லை என்று சொல்வதோ மிகுந்த மனச்சோர்வை அளிக்கும். இந்தத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில், தமிழக அரசு எளிய எஸ்எம்எஸ் சேவையை அறி முகப்படுத்தியுள்ளது. உங்கள் ரேசன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 89399 22990 அல்லது 97739 04050 ஆகிய எண்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், கடையின் நிலை மற்றும் இருப்பு விவரங்களை வீட்டிலிருந்தே துல்லிய மாகத் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த, குறிப்பிட்ட குறியீடு களை எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். உங்கள் கடையில் என்னென்ன பொருட்கள் கையிருப்பில் உள்ளன என்பதை அறிய ஞனுளு 101 என்றும், அன்றைய தினம் கடை திறந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள PDS 102 என்றும் டைப் செய்து மேற்கண்ட எண்களுக்கு அனுப்பினால், உடனடியாகத் தமிழிலேயே விரிவான தகவல் உங்களுக்கு வந்து சேரும். இதன் மூலம் தேவை யற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்க முடியும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News