உடல் முழுவதும் தேமலா? இதோ டிப்ஸ்!!!

உடல் முழுவதும் தேமலா? இதோ டிப்ஸ்!!!



உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள்,


வாயுத்தொல்லை


* வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும்.


* வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து.


* இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும்.


* வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம்.

தொடர் விக்கல்


* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

பித்த வெடிப்பு


* கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

தேமல்


* வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்


* கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்


* வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்..

.

*லால்குடி வெ நாராயணன்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%