வரம் தரும் வர முத்தீஸ்வரர் கோவில்

வரம் தரும் வர முத்தீஸ்வரர் கோவில்



மகா சிவராத்திரி அன்று வர முக்தீஸ்வரரை தரிசித்தால் நீங்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை 

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை அருகே எருமை வெட்டி பாளையத்தில் இந்த முத்தீஸ்வரர் அருள் பாலிக்கிறார் பழமையான இக்கோவில் பல ஆண்டாக வழிபாடு இல்லாமல் இருந்தது 2010ல் புனரமைக்கப்பட்டு தற்போது பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது 


   நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு நிலை ராஜகோபுரம் பிரம்மாண்டமாக உள்ளது கோயில் முழுவதும் கருங்கல்லால் ஆனது ஆனால் அஸ்திவாரம் மட்டும் செம்மண்ணால் ஆனது அதன் மீது கருங்கல் திருப்பணி நடந்துள்ளது 

கட்டுமானத்தில் சுண்ணாம்பு கடுக்காய் சேர்ந்த கலவை சேர்த்து விமானம் அமைத்துள்ளனர் இதன் சிறப்பு என்னவென்றால் தண்ணீரை தன்னுள் சேகரித்து வைத்து 

கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் 


    மூலவரான வர முத்தீஸ்வரர் திருமண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் நல்ல எண்ணத்துடன் யார் வேண்டினாலும் சுவாமி வரம் கொடுத்து விடுவார், பிறவியே வேண்டாம் என விரும்புபவர்கள் சுவாமியின் திருவடியில் சரணடைந்தால் போதும் பங்குனி உத்திரத்தன்று சூரிய கதிர்கள் சுவாமியின் மீது படுகிறது அப்போது சுவாமியை வழிபட்டால் சூரிய தோஷம் நீங்கும் சுவாமிக்கு வலது புறத்தில்

காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது வெள்ளியன்று விளக்கேற்றினால் திருமண யோகம் உண்டாகும் இக்கோவிலில் கொடிமரமோ நவக்கிரக சன்னதிகளோ கிடையாது என்பது விசேஷமான அம்சமாகும் 

சென்னையில் இருந்து காரனோடை 24 கிலோமீட்டர். செங்குன்றத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%