உத்த​ராகண்​டில் ஏப்.22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

உத்த​ராகண்​டில் ஏப்.22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு


டேராடூன்: வரும் ஏப்​ரல் 22-ம் தேதி கேதார்​நாத் கோயில் நடை திறக்​கப்​படு​கிறது.


உத்த​ராகண்​டில் சார்​தாம் என்​றழைக்​கப்​படும் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்​கள் அமைந்துள்​ளன. இமய மலை​யில் அமைந்​துள்ள இந்த புனிதத் தலங்​கள் குளிர்காலத்​தில் மூடப்​பட்​டிருக்​கும். கோடை காலத்​தில் 4 கோயில்​களின் நடைகளும் திறக்​கப்​படும்.


இந்த சூழலில் வரும் ஏப்​ரல் 22ம் தேதி காலை 8 மணிக்கு கேதார்நாத் கோயில் நடை திறக்​கப்​படு​கிறது. ஏப்​ரல் 23ம் தேதி பத்​ரி​நாத் கோயில், ஏப்​ரல் 19ம் தேதி கங்​கோத்​ரி, யமுனோத்ரி கோயில்​களின் நடைகள் திறக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.


இது குறித்து உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: ஏப்​ரல் 22ம் தேதி கேதார்​நாத் கோயில் நடை திறக்கப்​படு​கிறது. இதற்​கான ஆயத்​தப் பணி​கள் தொடங்கப்பட்டு உள்​ளன. ஒவ்​வொரு ஆண்​டும் பகவான் சிவனை வழிபட வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது.


இந்த ஆண்டு தெய்வ பூமிக்கு வரும் பக்​தர்​களின் பாதுகாப்​புக்கு தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் மேற்கொள்​ளப்​படும். இவ்​வாறு முதல்​வர் புஷ்கர் சிங்​ தாமி தெரிவித்​துள்​ளார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%