தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்

தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்


 

புதுடெல்லி: தேசிய விரைவுச் சாலைகளுக்​கான சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கும் விதி​களில் மத்​திய அரசு மாற்​றங்​களை அறி​வித்​துள்​ளது. இது இன்று முதல் அமலுக்கு வரு​கிறது.


இப்​போது சாதாரண நெடுஞ்​சாலைகளை​விட விரைவுச் சாலைகளுக்கு 25% கூடு​தல் சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது. மேலும் விரைவுச் சாலை​யின் பெரும் பகு​தி​யில் கட்​டு​மானப் பணி முடி​யாமல் இருந்​தா​லும், அதன் முழு நீளத்​துக்​கும் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது. இது வாகன ஓட்​டிகளுக்கு பெரும் சுமை​யாக உள்​ளது.


இந்​நிலை​யில் மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:


தேசிய நெடுஞ்​சாலைக் கட்டண (வி​கிதங்​கள் நிர்​ண​யம் மற்​றும் வசூல்) விதி​கள், 2008-ல் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி, விரைவுச் சாலை முழு​மை​யாகத் திறக்​கப்​ப​டாத பட்​சத்​தில், கட்​டு​மானப் பணி​கள் முடிந்து செயல்​பாட்​டில் இருக்​கும் தூரத்​துக்கு மட்​டுமே சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும். முடிக்​கப்​ப​டாத விரைவுச் சாலைகளில், தேசிய நெடுஞ்​சாலைகளுக்கு இணை​யான குறைந்த கட்​ட​ணமே வசூலிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.


கட்​டு​மானப் பணி முடிந்து செயல்​பாட்​டில் உள்ள விரைவுச் சாலைப் பகு​தி​களைப் பயன்​படுத்த வாகன ஓட்​டிகளை ஊக்​கு​விப்​ப​தற்​காகவே மத்​திய அரசு இந்த அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளது. இதனால் பழைய நெடுஞ்​சாலைகளில் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசல் மற்​றும் அதனால் ஏற்​படும் சுற்​றுச்​சூழல் மாசு குறை​யும் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும் சரக்கு மற்​றும் பயணி​கள் போக்​கு​வரத்து விரை​வாக நடை​பெறு​வது உறுதி செய்​யப்​படும்.


இந்​தத் திருத்​தப்​பட்ட விதி​கள் இன்​று முதல் நடை​முறைக்கு வரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. விரைவுச் சாலை முழு​மை​யாகத் திறக்​கப்​படும் வரை அல்​லது அதி​கபட்​ச​மாக ஓராண்டு வரை இந்​தச் சலுகை அமலில்​ இருக்​கும்​ எனத்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%